29/08/2018
தியான நிலம்.
"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது" தத்துவாசிரியர் பிரான்சிஸ் பேகனின் புகழ்வாய்ந்த ஒரு பொன்மொழி இது.
எழுதும் செயற்பாடு என்னளவில் தியானம் போன்றது. எழுதுதல் எனக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால் நான் எழுதுகின்றேன். பயணங்கள் எனக்குப் பாடங்கள் சொல்லித் தருகின்றன. ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தொடர்ந்து பயணிக்கின்றேன். இவை இரண்டும் தரும் அமைதியை, அனுபவத்தை, மகிழ்ச்சியை, மனமொருங்குதலை, இரசிக்கின்றேன்.
வேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம். அவ்வாறு கடந்து செல்லும், அற்புத தருணங்களில் ஒரு சிலவற்றையாவது நாம் பதிவு செய்யமுடியும்.
அவ்வாறு பதிவு செய்வதற்காகவும், மீள் நினைவு கொண்டு பயனுறுவதற்காவும், என் வாழ்வில், சந்தித்த மாந்தர்கள், அறிவுறுத்திய வழிகாட்டிகள், குருமார்கள், பயணங்கள், படிப்பினைகள், பழகித் தெரிந்த கலைகள், அறிந்து கொண்ட அனுபவங்கள், என எல்லாவற்றையும், இங்கே எழுதிப் பார்க்கின்றேன்... படிக்கின்றேன்... ஒரு கதை சொல்லியாக......
இது என்னை உள்ளுணர்ந்து கொள்ளும் தியான நிலம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
எனக்குப் பிடித்தமான மொழிகளில் ஒன்று சினிமா மொழி. காட்சி மொழியான இதன் மூலம் கதை சொல்லல் என்பது தனிப்பெரும் கலை. இந்தக் கதையாடல் மூலம் வரலாற...
-
2018 விடைபெற்றுக்கொண்டது... எமது 60வது அகவை ஆண்டு அது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து நினைவுகளை அசைபோடத் தொடங்கிய ஆண்டு. வாழ்வின் ...
-
சினிமா மீதான என் விருப்பும், அனுபவங்களும் ஆரம்பமானது தம்பலகாமத்தில். ஆனால் அந்த அனுபவம் டென்டுக் கொட்டகையில் தொடங்கியது அல்ல. அதேபோல் இது...
-
கோவிலில் நீண்ட காலம் பூசை செய்யும் ஐயரை நிறுத்தினால், ஐயர் என்ன செய்யலாம்? புதிய கோவில் தொடங்கலாம் என்பதெல்லாம் சமகாலத் தேர்வுநிலை. ஆனால் ...
-
- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு) வான் தோற்றம் - படம்: நன்றி : Pulendran Sulaxshan பிறந்தமண் என்பது எல்லோர்க்கும் பிடித்தமான...
தியான நிலம்.
"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை நுட்பமான, சரியான மனிதனா...
No comments:
Post a Comment